பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்

0
998
Uttar Pradesh Married Girl Cut EX Boy friend Tounge
photos source by : Google

திருமணம் முடிந்த தனது முன்னாள் காதலியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபனின் நாக்கை வெட்டிய பெண் தொடர்பான சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.(Uttar Pradesh Married Girl Cut EX Boy friend Tounge)

திருமணமான  பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்  வீட்டிற்கு வந்து தகராறு செய்தார் முன்னாள் காதலனின் அட்டகாசம்  பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண் முன்னாள் காதலனின் நாக்கை துண்டித்து விட்டார்.

வெட்டுப்பட்ட நாக்கு கீழே கிடந்த நிலையில்  காதலன் ஓடி விட்டான். இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதிக்கபட்டவரின் தாயார் முன்னாள் காதலியின் வீட்டுக்கு சென்று சண்டைபோட்டு உள்ளார்.

பின்னர் வெட்டுபட்ட நாக்கை எடுத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்து உள்ளார். முன்னாள் காதலி போலீசில் தனது முன்னாள் காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தனது தற்காப்பு கருதியே அவனின் நாக்கை வெட்டியதாகவும் கூறினார் .

நாக்கு வெட்டப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Uttar Pradesh Married Girl Cut EX Boy friend Tounge