கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான்.
முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க இந்த ஒரே ஒரு கிரீம் போதும். இதனை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 1
- பாதம் பொடி – 1 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி இதனை நன்கு துருவி கொள்ளவும்.
பின் துருவிய உருளை கிழங்கை வடிகட்டி கொண்டு அதன் சாறை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ளவும்.
வடிந்த சாறை ஒரு சின்ன பவுலில் மாற்றி அதில் பாதம் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்தால் கிரீம் ரெடி.

பயன்படுத்தும் முறை
முதலில், தினமும் இரவில் முகத்தை நன்கு சுத்தம் செய்யவும்.
அதன் பின் தயார் செய்து வைத்துள்ள கிரீமை முகத்தில் தடவவும். அப்படியே இரவு முழுவதும் முகத்தில் வைக்கவும்.
பின் மறுநாள் காலையில் முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துக்கொள்ளலாம்.
இந்த கிரீமை தொடர்ந்து ஒரு வாரம் முகத்தில் பயன்படுத்தி வர கருவளையங்கள் மறைந்து பொய் முகம் பொலிவாக இருக்கும்.