(usa alert america tourist srilanka may day)
இலங்கையில் நடைபெறவுள்ள மே நாள் பேரணிகள் தொடர்பாக அமெரிக்கா பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மே நாள் பேரணிகள் நடைபெறவுள்ள மே 1ஆம் நாளுக்கும் 7ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க குடிமக்களுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“உலகத் தொழிலாளர் நாளை முன்னிட்டு. பல்வேறு அரசியல் கட்சிகள், குழுக்கள், பேரணிகளை நடத்தவுள்ளன.
கொழும்பில் மாத்திரமன்றி, யாழ்ப்பாணம், காலி, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் இந்தப் பேரணிகள் இடம்பெறவுள்ளன.
இந்தப் பேரணிகள் அமைதியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் வீதிகள் மூடப்படுவது, போக்குவரத்து தடங்கல்கள் ஏற்படுவதை எதிர்பார்க்கலாம்.
அமைதியான பேரணிகளில் மோதல்கள், வன்முறைகளும் ஏற்படக் கூடும். எனவே அமெரிக்க குடிமக்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்.
உள்ளூர் ஊடகங்களின் அறிவிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More Time Tamil News Today
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:usa alert america tourist srilanka may day, usa alert america tourist srilanka may day