அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது. us mother killed companion bathtub without compassion child
அந்த குழந்தைக்கு ரெய்னர் என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் ஜென்னா போல்வெல் பரபரப்பாக பொலிஸ் நிலையம் வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர் என அழுது கொண்டே புகார் அளித்துள்ளார்.
அதை உண்மை என நம்பிய பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது ஜென்னாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
அப்போது அவர் தனது குழந்தையை குளியல் தொட்டியில் தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாகவும், மேலும் குழந்தை ரெய்னரின் உடலை ஒரு பெரிய ‘பேக்’கில் அடைத்து அதை அருகில் உள்ள பூங்காவில் வீசியதாகவும் கூறியுள்ளார்.
எனவே, ஜென்னாவை கைது செய்த பொலிஸார், கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலும் மீட்டுள்ளனர்.
பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்றது ஏன் என ஜென்னா பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது குழந்தை ரெய்னர் இடைவிடாது தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜென்னா குழந்தையை குளியல் தொட்டியில் நிரம்பி இருந்த தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
tags ;- us mother killed companion bathtub without compassion child
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- உலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு
- உலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி
- அமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது
- முன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்!
- ஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்
- ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்
- பத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்
- முகநூல் பயனாளர்களின் தகவல் திருட்டு – முகநூல் நிறுவனத்துக்கு 12 கோடி ரூபாய் அபராதம் !
எமது ஏனைய தளங்கள்