உதயங்க வீரதுங்க டுபாய் சிறைச்சாலையில் தடுத்து வைப்பு

0
440
Udayanga Weeratunga, today informed Colombo Fort Magistrate’s Court

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாயிலுள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(Udayanga Weeratunga, today informed Colombo Fort Magistrate’s Court)

குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விடயத்தை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நீதிமன்றில் ஆஜராவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டர்போல் ஊடாக கைது செய்யும் பகிரங்க பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் பாரிய நிதி மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- Udayanga Weeratunga, today informed Colombo Fort Magistrate’s Court

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites