உலகில் உள்ள பல நகரங்களில் போக்குவரத்து சேவைக்கு கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை வாடகைக்கு முன்பதிவு செய்து நடைமுறை அதிகரித்து வருகிறது.
இவ்வாறான நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகிவரும் ஒரு வீடியோவில் துபாயில் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணை காட்டுகிறது.

குறித்த வீடியோவில் அந்த பெண் வாகனம் பழுதடைந்த பிறகு வறண்ட பாலைவன பகுதியின் நடுவில் சிக்கி தவிக்கிறார். அப்போது தனது செல்போனில் உள்ள ஊபர் செயலியில் முன்பதிவு செய்ய முயற்சி செய்துள்ளார்.
அந்த செயலியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இடையே ஒட்டக சவாரிக்கும் ஆர்டர் செய்யும் வசதி இருப்பதை பார்த்து வியக்கிறார்.
பின்னர் அவர் ஒட்டக சவாரிக்கு முன்பதிவு செய்த நிலையில் சில நிமிடங்களில் இளைஞன் ஒருவர் ஒட்டகத்துடன் அங்கு வருகிறார். இந்த வீடியோ துபாய் – கட்டா சாலையில் உள்ள அல்-படேயர் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.
