லெபனான் மற்றும் ஜோர்தான் முதலான நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற இரண்டு இலங்கை பெண்கள் காணாமல் போயுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. two house mat missing Tamil Johnathan Lebanon Tamil latest news
இரத்தினபுரி – ஓப்பநாயக்க பஹல இலுக்கும்புற பகுதியைச் சேர்ந்த பெருமாள் காளியம்மாள் மற்றும் மொரட்டுவை – கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்த சுமித்ரா நில்மினி பெர்னாண்டோ ஆகியோர் தொடர்பிலேயே எவ்வித தகவல்களும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி ஜோர்தான் சென்ற பெருமாள் காளியம்மாள் என்ற பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.
அத்துடன், 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் திகதி லெபனான் சென்ற சுமித்ரா நில்மினி குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த இரண்டு பெண்கள் தொடர்பான தகவல் அறிந்தவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு பிரிவின் 0112 864 100 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
tags :- two house mat missing Tamil Johnathan Lebanon Tamil latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கை முஸ்லீம் நாடு! ஆய்வு நூல் வெளியீட்டால் அதிர்ச்சியில் மக்கள்!
- கருப்பு பணம் வாங்க மாட்டேன்! – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்!
- முஸ்லிம்களின் நன்மை கருதியே சிறையில் காற்சட்டை அணிய இணங்கினேன்
- காத்தான்குடியில் கோர விபத்து – வேனில் பயணித்த மூவர் மரணம்
- மாணவர்களையும் விட்டுவைக்காத பதவி மோகம் – பைசூலை கொலை செய்தவர்கள் சீர்திருத்த பள்ளியில் தடுத்துவைப்பு
- ரெஜினாவின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றியவரா! வெள்ளை வானில் கடத்தியவரா! அடுத்த ஜனாதிபதி?
- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு ஆக்கிரமிப்பாளர் – வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின்
- ரெஜினாவின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.