“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்

0
1170
TV Actress Shrenu Parikh Sex Harassment Latest Gossip,tamilgossip,Bollywood cinema,tamil cinema gossip,Bollywood cinema gossip, Shrenu Parikh

(TV Actress Shrenu Parikh Sex Harassment Latest Gossip )

இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. எத்தனையோ பாலியல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்க்கான சரியான தண்டனை கொடுக்கபடாததன் காரணமாக  மேலும் மேலும் இது போன்ற குற்றம் நடைபெற்ற வண்ணமே இருகின்றது .

இது போன்ற தகாத பாலியல் சீண்டல்கள் நடிகைகளுக்கும் நடந்துள்ளது .

6 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பிரபல டிவி சீரியல் நடிகை ஷ்ரெனு பாரிக் தெரிவித்துள்ளார்.

TV Actress Shrenu Parikh Sex Harassment Latest Gossip 
Photo Source By :Pinkvilla

ஹிந்தி தொடர் நாடகங்களில் நடித்து புகழ் பெற்ற ஷ்ரெனு பாரிக் தனக்கு நடந்த பாலியல் கொடுமை பற்றி சமுக வலைதளங்களில் கூறியுள்ளார் .

சின்ன வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் என் தாத்தா, பாட்டியுடன் அவர்களின் ஊரில் தான் இருப்பேன். அந்த நாட்களில் உள்ளூர் பேருந்தில் பயணம் செய்வோம். பேருந்தில் அமர இடம் கிடைக்காவிட்டால் எனக்கு சீட் கொடுக்குமாறு என் தாத்தா யாரிடமாவது கேட்பார்.

ஒரு முறை என் தாத்தா கேட்டபோது ஒரு அங்கிள் என்னை தன் மடியில் அமர வைப்பதாக கூறினார். நானும் அங்கிள் தானே என்று அவர் மடியில் அமர்ந்து அப்படியே தூங்கிவிட்டேன்.

என்னமோ தவறாக நடக்கிறது என்று திடுக்கிட்டு கண் விழித்தேன். என் உடல் எல்லாம் நடுங்கியது. அந்த இடத்தில் கையை வைத்து என்னை பிடித்துக் கொள்வது சாதாரணம் போன்று என்று நினைத்தேன். அப்பொழுது எனக்கு 6 வயது. என் தாத்தா பேருந்தில் உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் அந்த அங்கிள் செய்த விஷயத்தை சொல்ல முடியவில்லை.

வெளியே சொன்னால் இந்த சமூதாயம் நம்மை ஏளனமாக பார்க்கும் .நம் பேச்சை நம்பாது ,எனவே தான் அன்று நடந்தா விடயத்தை நான் யாரிடமும் சொல்ல வில்லை .என கூறுகின்றார் ஷ்ரெனு பாரிக்

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:TV Actress Shrenu Parikh Sex Harassment Latest Gossip