ஜப்பானைத் தாக்கிய கடும் புயல் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. Trami storm hits Japan 2 killed
டிராமி (Trami) என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் டோக்கியோவில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனேப் (Tanabe) நகரில் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. இதனால் மறுநாளும் பலத்த காற்று வீசி வரும்நிலையில் மழையும் பெய்து வருகிறது. சாலைகளிலும் ரயில் தண்டவாளங்களிலும் சாய்ந்து விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையங்களில் பல்வேறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. புல்லட் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘டிராமி’ புயலுக்கு இதுவரை 2 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் நடந்து வருகின்றன.
tags :- Trami storm hits Japan 2 killed
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- இந்தோனேசியாவில் மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: 2 பேர் காயம்
- மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மேலாடையின்றி பாடிய டென்னிஸ் வீராங்கனை
- ஓரினச் சேர்க்கையாளர்களினால் சீனாவில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- இந்தோனேசியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு
- இந்தோனேசியா நிலநடுக்கம்: 384 பேர் பலி
- 6,000 பெண்களுடன் உறவு: உலகையே திரும்பி பார்க்க வைத்த பிரபல காதல் மன்னன் மரணம்
எமது ஏனைய தளங்கள்