(Train Colombo Kandy line collides another train tamil news)
கொழும்பு – கண்டி பிரதான புகையிரத பாதையில் பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே இரண்டு புகையிரதங்கள் மோதிக்கொண்டதில், புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத தலைமை கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரத விபத்தில் 32 பேர் படுகாயமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பொல்கஹவெல, குருணாகல், ரம்புக்கனை மற்றும் கேகாலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் இயந்திர கோளாறு காரணமாக பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது பின்னால் தொடர்ந்து பிறிதொரு புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்துடன் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
(Train Colombo Kandy line collides another train tamil news)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!