tragedy lasted three shooting police Thoothukudi district returned normalcy
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்து, சகஜநிலை திரும்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது.
கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு, பெற்றோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. பொலிஸ் துப்பாக்கிச் சூடு, தடியடி சம்பவங்களில 13 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பொலிஸார் உள்ளிட்ட 136 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனால், கடந்த மூன்று நாட்களாக கலவர பூமியாக தூத்துக்குடி காட்சியளித்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள். வங்கிகள், தனியார் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. பேருந்துகள் இயங்கவில்லை. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
தமிழக அரசால், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, போக்குவரத்துத் துறை கூடுதல் செயலாளர் டேவிதார், பொலிஸ் அதிகாரி சைலேஷ்குமார் யாதவ், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முரளி ராமா உள்ளிட்டோர் தூத்துக்குடி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், ஹோட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரை நேற்று முன்தினம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது கடைகள், வணிக நிறுவனங்களை படிப்படியாகத் திறக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அதன் பேரில், தூத்துக்குடி மாநகரில் நேற்று ஆங்காங்கே சில கடைகள் திறக்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக முடங்கியிருந்த பேருந்து போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் தூத்துக்குடியில் நேற்று காலை முதல் சகஜநிலை திரும்பியது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோர் மற்றும் அவர்களது உறவினர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
tragedy lasted three shooting police Thoothukudi district returned normalcy
More Tamil News
- அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!
- சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் – காடுவெட்டி குரு!
- பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு!
- அஞ்சல்துறை ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்!
- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இலவச சட்ட உதவி மையம்!
Tamil News Group websites :