இன்றைய ராசி பலன் 07-06-2018

0
784
Today horoscope 07-06-2018

இன்று!

விளம்பி வருடம், வைகாசி மாதம் 24ம் தேதி, ரம்ஜான் 22ம் தேதி,
7.6.18 வியாழக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 9:03 வரை;
அதன் பின் நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மாலை 6:50 வரை;
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்(Today horoscope 07-06-2018)

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம்:

நேர்மையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கடந்த கால உழைப்பிற்கான நன்மை வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

ரிஷபம்:

பேச்சில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் சாதனை இலக்கை அடைவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விருந்து விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம்:

மனதில் தற்பெருமை எண்ணம் மேலோங்கும். குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான அளவில் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம்.

கடகம்:

செயலில் கூடுதல் அக்கறை தேவை. தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். சிலர் திடீர் செலவால் கடன் வாங்க நேரிடும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

சிம்மம்:

மனதில் அன்பும், கருணையும் மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கன்னி:

உடல்நலனில் அக்கறை தேவை. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்குவர். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

துலாம்:

எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். நண்பரின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

விருச்சிகம்:

சிலர் சுயலாபம் பெற உங்களை நெருங்குவர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்கள் உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம்.

தனுசு:

வாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள். திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். உறவினர் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வர்.

மகரம்:

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் கூடுதல் நன்மை பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கும்பம்:

நல்லவர் செயலையும் தவறாக கருதும் சூழல் ஏற்படலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். மிதமான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல வேண்டாம்.

மீனம்:

குடும்ப கஷ்டத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணி நிறைவேற கூடுதல் முயற்சி அவசியம். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். மிதமான வருமானம் கிடைக்கும்.உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 07-06-2018