இன்று மீண்டும் அமைச்சரவைக்கு செல்கிறது 21வது திருத்தம்

0
598

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 21வது திருத்தச் சட்ட வரைபு தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து உத்தேச திருத்தம் கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட நிலையில் மேலும் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டது.

வாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ள நிலையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைபை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.