டயானா கமகேவுக்கு கால அவகாசம்!

0
407

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) கால அவகாசம் வழங்கியுள்ளது.

அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி சமூக ஆர்வலர் ஓசல ஹேரத் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.