கனடாவில் அறிமுகமாகும் நேர மாற்றம்

0
23

கனடாவில் இவ்வருடம் நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு பகல்நேர சேமிப்பு நேரம் முடிவடைகிறது. இதன்படி கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்பட்டு மீண்டும் வழமையான நேரத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதன் மூலம் கனடியர்கள் அந்த இரவில் கூடுதலாக ஒரு மணி நேரம் தூங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

எனினும் இலையுதிர் காலம் முடிந்து குளிர்காலம் நெருங்கும் நிலையில், நாட்கள் குறுகியதாக உணரப்படுவதைப்போல சூரிய உதயம் முன்னதாகவும் சூரிய அஸ்தமனம் விரைவாகவும் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்தகாலத்தில் (மார்ச் மாதம்) பகல் நேர சேமிப்பு நேரமாற்றம் மீண்டும் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது அப்போது கடிகாரங்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கி மாற்றப்படுவதால் கனடியர்கள் அந்த இரவில் ஒரு மணி நேர தூக்கத்தை இழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான பகுதிகளில் இந்த நேர மாற்றம் நடைமுறையில் இருந்தாலும் ஒவ்வொரு மாநகராட்சியும் தனித்து முடிவு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளில் நேர மாற்றத்தை பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.