தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

0
507
thunderstorms thunderous lightning tamilnadu

தமிழக மாவட்டங்களில் ஒர் இரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.tamil news thunderstorms thunderous lightning tamilnadu

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகப்பட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 8செ.மீட்டர் மழையும் மதுரை மேட்டுப்பட்டியில் தலா 7செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

அதேபோல் தேனி பெரியகுளம், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தலா 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதில் சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதில் அதிகப்பட்ச வெப்ப நிலையாக 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்ப நிலையாக, 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இதேபோல் புதுவையிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பபுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :