கொழும்பு நகரில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் 40,000 க்கும் அதிகமானோர் தினமும் போதைப்பொருள் உட்கொண்டு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக சுயதொழில் நிபுணர்களின் தேசிய முச்சக்கரவண்டி கூட்டமைப்பின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். (Three wheeler travelers caution colombo city)
துர்நாற்றமில்லாத கஞ்சா, பாபுல், போதை மாத்திரைகள் மற்றும் 14 ரக போதைப்பொருட்களை அவர்கள் பாவிப்பதாகவும் துர்நாற்றம் வீசாமையினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு பிரிவின் தலைவருக்கு இதுகுறித்து தான் அறிவித்துள்ளதாகவும், எனினும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேல் மாகாணத்தில் மாத்திரம் முச்சக்கரவண்டிகளில் தொழில் புரிகின்றவர்கள் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் உள்ளதோடு, அதிகமானோர் கொழும்பு நகரில் வசிப்பவர்கள் எனவும் முச்சக்கரவண்டி போக்குவரத்து விரைவாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதான முச்சக்கரவண்டி நிறுத்தும் இடங்களில் போதைப்பொருள் விற்பனையும் அதிகமாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளதோடு, முச்சக்கரவண்டிகளில் தொழில் புரிகின்றவர்களுடன் நெறுங்கிய தொடர்புள்ளதால் பல தகவல்கள் கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு போதைப்பொருட்கள் பாவனையாளர்கள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவது பயணிகள் சேவைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், இதனால் மக்கள் முச்சக்கரவண்டி தொழிலில் இருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் பின்னர் இந்த தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Three wheeler travelers caution colombo city