சடலத்துடன் தகாத உறவு கொண்ட மூவர்; பொலிஸாரின் தலையீட்டால் ஆரம்பமான உள்ளக விசாரணை

0
132

ஹட்டன், டிக்கோயா கிளங்கன் ஆதார மருத்துவமனையில், யுவதியின் உடலம் தொடர்பில் அத்துமீறி செயற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை மருத்துவமனை நிர்வாகம் ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் காவல்நிலையத்துக்கு இன்று மாலை வரை எவரும் முறைபாடுகளை முன்வைக்கவில்லை என ஹட்டன் காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், கிளங்கன் ஆதார மருத்துவமனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. முன்னதாக, 23 வயது யுவதி ஒருவர் கடந்த 23 ஆம் திகதி உயிரை மாய்துக் கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், மரண விசாரணை பின்னர் உடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மருத்துமனைக்கு ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த நாள் அதிகாலை வேளையில் பிணவறைக்குள் பிரவேசித்த மருத்துவமனையின் மூன்று பணியாளர்கள், உடலம் தொடர்பில் அத்துமீறி செயற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் மருத்துவமனை நிர்வாகம் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தி பொது மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.