(Thoothukudi Problem Youth Asked Question Rajinikanth Latest Gossip )
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு போரட்டத்தில் பொலிசாரின் கொடூர நடவடிக்கையால் 13 பேர் பலியாகியுள்ள நிலையில் ப போது மக்கள் பலத்த காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் பாதிக்கப்பட்டோரை பார்பதற்காக பல அரசியல் தலைவர்கள் தூத்துகுடி நோக்கி படையெடுத்தனர் .அந்த வரிசையில் முக ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமல் ஹாசன் ,பிரம லதா விஜயவிஜய காந்த் ,இடதுசாரி தலைவர்கள் ,வைகோ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 100 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாத ரஜினிகாந்த், தூப்பாக்கிச் சூடு நடந்த 9 நாட்களுக்குப் பின் நேற்று தூத்துக்குடிக்கு சென்றார்.
அங்கு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, கலவரத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரிடம் சென்று நலம் விசாரிக்கையில், அந்த இளைஞர் ‘யாரு நீங்க?’ என்று ரஜினிகாந்தை நோக்கி கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் ‘நான்தாப்பா ரஜினிகாந்த்’ என்று பதிலளிக்கிறார்.
ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று சொன்னதும், “சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா?” என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ‘#நான்தாப்பா ரஜினிகாந்த்’ என்ற ஹேஷ்டாக்கும் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- ஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்
- ஐஸ்வர்யா, பிரியங்கா, ஷில்பா, தீபிகா வரிசையில் தமிழ் சினிமாவைக் கலக்கவுள்ள ஆலியா பட்!
- காதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் ????
- தாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்
- ஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் ??
- காதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்
- ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா!
- இத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை! எதற்காக?
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com