வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயம் வருடாந்தப் மஹோற்சவப் பெருவிழா இன்றைய தினம் பிற்பகல் 04.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. (Thondamanaru Selva Sannathi Murugan temple festival today)
தொடர்ந்தும் 15 நாட்கள் இடம்பெறவுள்ள இந்த ஆலயத் திருவிழாவில் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09 மணிக்கு கைலாச வாகனத் திருவிழா நடைபெறவுள்ளது.
22 ஆம் திகதி புதன்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 07.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை காலை 08 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
இதேவேளை ஆலய வருடாந்தப் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.
ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் நன்மை கருதி சிறப்புப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
மஹோற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் அமைந்துள்ள 20 அன்னதான மடங்களிலும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள்
- மட்டக்களப்பு இளம் ஊடகவியலாளர் கொழும்பில் காலமானார்
- நாவற்குழியில் 62 குடும்பங்களின் காணி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு
- கத்தியைக் காட்டி 59 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்
- காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- 24 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்; இந்தியரான கோடீஸ்வர வர்த்தகர் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Thondamanaru Selva Sannathi Murugan temple festival today