புலிகளை விட நாட்டிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியவர்கள்; அம்பலப்படுத்திய தேரர்!

0
356

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் நாட்டிற்கு மிகப்பெரிய அழிவை மக்கள் விடுதலை முன்னணியினர் செய்துள்ளனர் என மேல் மாகாண அதிகார சங்கநாயக்க வண. திஹாகொட பத்திய தேரர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விடுதலைப் புலிகளை விட நாட்டுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய நபர்கள்; தேரர் அம்பலப்படுத்தும் தகவல்! | People Who Have Caused Greater Country The Ltte

கடந்த காலங்களில் ஜே.வி.பி நாட்டிற்கு செய்த அழிவுகளை மக்கள் மறக்கவில்லை. மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் தோன்றினாலும், இன்னமும் அதே கொடிய கட்சி தான். மக்கள் விடுதலை முன்னணியின் பௌத்த விவகாரங்களின் தலைவராக நியமிக்கப்பட்ட கடந்த காலத்தை அறியாத இளைஞர்கள் மக்கள் விடுதலை முன்னணியை சுற்றித் திரண்டு வருகின்றனர்.

தலதா மாளிகை மீதான தாக்குதல், பிக்குகள் படுகொலை, அரச சொத்துக்கள் அழிக்கப்பட்டமை போன்ற பல அழிவுச் செயல்களுக்கு ஜே.வி.பி பொறுப்பேற்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மேலும், அவர்கள் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளாத ஒரு குழுவிடம் நாட்டின் ஆட்சி சென்றால் ஏற்படும் சூழ்நிலையை எவரும் கற்பனை செய்து பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.