உலகின் மிகவும் பலம் பொருந்தியவர் கனடா நாட்டவர்

0
269

இந்த உலகில் மிகவும் பலம் பொருந்திய நபர் ஒரு கனேடியர் என தெரிவிக்கப்படுகிறது.

உலகில் மிகவும் பலம் பொருந்திய நபரை கண்டறிவதற்கான சர்வதேச போட்டியில் கனடாவின் மொன்றியலைச் சேர்ந்த நபர் ஒருவர் வெற்றி ஈட்டியுள்ளார்.

ஜெஃப்ரி அட்லர் என்ற நபர் இவ்வாறு உலக குரொஸ்பிட் (CrossFit) போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

ஒலிம்பிக் பலுதூக்கல், ஜிம்னாஸ்டிக், ஓட்டம், சைக்கிள் ஓட்டம், ஃபுல் ஆப்ஸ், பாக்ஸ் ஜம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இந்த அனைத்து துறைகளிலும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகின்றார். அந்த வகையில் இந்த ஆண்டின் குரொஸ்பீட் போட்டியில் ஜெஃப்ரி ஆட்லர் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

தாம் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதாகவும் ஓய்வு எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் சுமார் மூன்று லட்சம் பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.