துபாயில் ஸ்தாபிக்கப்பட்ட ஆட்கள் இல்லாத ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் 20 லட்சம் பேரின் கவனத்தை ஈர்த்துள்ளது. துபாய் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் 2017 ஆம் ஆண்டு துபாயில் ஸ்தாபிக்கப்பட்டது.
உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் இதுவாகும். பொலிஸ் நிலையத்துக்கு செல்லாமல் டிஜிட்டல் முறையில் பல்வேறு சேவைகளை இப்பொலிஸ் நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பொலிஸ் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு 5 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இதுவரை 20 லட்சத்துக்கு அதிமானோர் டிஜிட்டல் முறையில் விஜயம் செய்துள்ளதாகவும் 363,189 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரு நாளில் 24 மணித்தியாலங்களும் வாரத்தில் 7 நாட்களும் மனிதத் தலையீடுகள் இல்லாத ஸ்மார்ட் பொலிஸ் சேவையை வழங்குவதில் முன்னோடிகளாகத் திகழ்வில் நாம் பெருமையடைகிறோம்” என துபாய் ஸ்மார்ட் பொலிஸ் அதிகாரி மேஜர் ஜெனரல் அலி அஹமத் கனீம் தெரிவித்துள்ளார்.