மகளிர் ஆசிய கிண்ணத் தொடரில் அரையிறுதிக்குள் நுழைந்த இலங்கை அணி!

0
246

2024 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண மகளிர் கிரிககெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி  தகுதிப்பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் தாய்லாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இவ்வாறு அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தாய்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி தாய்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 11.03 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்து வெற்றியை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அணித்தலைவி சாமரி அதபத்து அதிகபட்சமாக 49 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.