இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பம்!

0
608

இலங்கை மற்றும பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச விளையாட்டுத் திடலில் ஆரம்பமாகியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணிக்கு துனித் வெல்லலாகே மற்றும் அசித பெர்ணான்டோ அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இப்போட்டி துனித் வெல்லலாகேவின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

பாகிஸ்தான் அணியிலும் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் அசார் அலி ஆகியோருக்கு பதிலாக நவிமான் அலி மற்றும் பவாட் அலாமி ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.