சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை!

0
246

இலங்கை அரசாங்கம் உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

2.9 பில்லியன் டொலர் நிதிஉதவி

இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் நிதிஉதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதிக்காக இலங்கை உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என imf நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செலவீனங்களை குறைப்பது குறித்து என சர்வதேச நாணயநிதியம் ஆராய்கின்றது ஆனால் படிப்படியாக அதனை செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே இராணுவத்தில் உள்ளவர்களை வீட்டுக்கு செல்லுங்கள் என தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை வேறு துறைகளிற்கு தொழில்துறைகளிற்கு மாற்ற முடியுமா என்ற கேள்விக்கு இதனால் ஏனைய துறைகளில் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை! | The Imf Does Not Impose Any Conditions

அவர்களை வேறு தொழில்துறைக்கு மாற்றினால் அந்த தொழில்துறையை சேர்ந்தவர்கள் தங்களுடைய வேலையை இராணுவம் கைப்பற்றிவிட்டது என முறைப்பாடு செய்வார்கள் எனவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் , அரசகட்டிடங்களை நிர்மானிக்கும் பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளமுடியும் ஆனால் கட்டுமான துறைக்கு அரசாங்கத்தின் ஒப்பந்தம் எதுவும் கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சர்வதேச நாணயநிதியம் விதித்துள்ள பல நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியுள்ளோம் சில நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது அது பெரிய பிரச்சினை இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.