கனடா நீதிமன்ற முடிவால் அதிர்ச்சியில் கோட்டாபய அரசாங்கம்

0
986

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையென கனேடிய ஒன்றாறியோ மாகாண சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ஒன்றாறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை பிரகடனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குக்கான நீதிமன்றின் தீர்ப்பும் கோட்டாபய அரசாங்கத்திற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்ததாக அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்காலில் மௌணிக்கப்பட்டதன் பின்னர் தங்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என்பதை நீதித்துறை சார்ந்து நிரூபிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர் என தெரிவித்தார்.