மும்பை படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு; ‘தலைவர் 170’ படக்குழு வெளியிட்ட புகைப்படம்!

0
244

நடிகர்களான ரஜினி மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படத்தை பகிர்ந்து மும்பை படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக’தலைவர் 170′ படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படம் உருவாகி வருகின்றது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை புகைப்படத்துடன் படக்குழு அறிவித்துள்ளது.