உலகின் மிக விலை உயர்ந்த நத்தார் மரத்தை அறிமுகம் செய்த நாடு!

0
197

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நத்தார் மரத்தினை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது.குறித்த நத்தார் மரத்தின் பெறுமதி சுமார் 04 மில்லியன் ஜேர்மன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 43 கோடி) என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

10 அடி உயரம் உள்ள இந்த நத்தார் மரம் 2,024 திட தங்க நாணயங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இதனைப் பொன் நாணய வியாபாரியான Pro Aurum உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 கிலோவுக்கும் அதிகமான எடையைக் கொண்ட இந்த வடிவமைப்பின் மேல் பகுதியில் உள்ள நாணயம் 24 கரட் தங்க நாணயம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை விற்பனை செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என வடிவமைப்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.