கனடாவின் வின்னிபிக்கில் அமைந்துள்ள நூலகமொன்றில் வினோத சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வின்னிபிக் பொது நூலக்தில் கடந்த 1974ம் ஆண்டு ஜுன் மாதம் 18ம் திகதி நூல் ஒன்று இரவல் வாங்கப்பட்டுள்ளது. இந்த நூல் சுமார் 48 ஆண்டுகளின் பின்னர் நூலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டெனியல் ஈ ஜெஸ்ஸி என்வரினால் எழுதப்பட்ட பேஸ்போல் என்ற நூலே இவ்வாறு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பேஸ்போல் விளையாட்டினை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்த பல்வேறு நுணுக்கமான தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பெறுமதியான புத்தகங்களை மீளப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் வின்னிபிக் நூலகம் தாமதக் கட்டணங்கள் அறவீடு செய்யப் போவதில்லை என அண்மையில் அறிவித்தது.
இந்த புத்தகத்தை யார் திருப்பி ஒப்படைத்தார்கள் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.