கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

0
105

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

சிவகங்கை மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந் ஆண்டகை, யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், நெடுந்தீவு பங்குத் தந்தை உள்ளிட்ட அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

திருப்பலி நிகழ்வு இன்று (15) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.