அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி திருகோணமலையில் போராட்டம் (Photo)

0
489

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி திருகோணமலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்கரைக்கு முன் அமைந்துள்ள காந்தி சுற்றுவட்டத்தில் நேற்று (18.12.2022) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயங்கரவாதச் தடைச் சட்டதை நீக்க வேண்டுமெனவும், இராணுவ மயமாக்கலை நிறுத்த வேண்டுமெனவும், திட்டமிட்ட காணி அபகரிப்புக்களை நிறுத்த வேண்டுமென கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம்
வடக்கு, கிழக்கு மக்கள் போராட்டத்துக்கான ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த போராட்டமானது திருகோணமலையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.