அமித் உட்பட 35 இனவாதிகளுக்கு தொடரும் விளக்கமறியல்

0
596
tamilnews kandy violence suspects remand deldeniya courts

(tamilnews kandy violence suspects remand deldeniya courts)

கண்டி மற்றும் திகன உள்ளிட்ட பிரதேசங்களில் இனவாதத்தை தூண்டும் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 35 பேரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று (14) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை மே 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்கவை அநுராதபுரம் சிறைச்சாலைக்கும், ஏனைய சந்தேக நபர்களை ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்க நீதவான் எம்.எம்.பரீக்டீன் உத்தரவிட்டுள்ளார்.

கண்டி பகுதியில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க மார்ச் 08 ம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(tamilnews kandy violence suspects remand deldeniya courts)

More Tamil News

Tamil News Group websites :