கருணாநிதி குணமடைந்து மக்கள் பணிகளைத் தொடர வேண்டும் – இலங்கை அமைச்சர் பிரார்த்தனை

0
484
tamil news thigambaram pray Karunanidhi former cm Tamil Nadu

(tamil news thigambaram pray Karunanidhi former cm Tamil Nadu)

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி நலம்பெற வேண்டும் என இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் இறைவனிடம் பிரார்த்திப்பதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இலங்கையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று அட்டனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ‘ தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளைத் தொடர வேண்டும்’

உலகத் தமிழர்களின் தலைவரான மு.கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

(tamil news thigambaram pray Karunanidhi former cm Tamil Nadu)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites