ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழ் பெண் உயரிய பதவியில்

0
841

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக உமாசந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இந்த நியமனம் சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உயரிய பதவியொன்றுக்காக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்ணாக உமா சந்திரா பிரகாஷ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

பெண் தலைமைத்துவத்தை உருவாக்கும் நோக்குடன் தனக்கு இந்த பதவி கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியடைவதாக உமா சந்திரா பிரகாஷ், எமது ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு கூறினார்.