(tamil news No final decision increasing MPs salaries Speakers Office)
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானமும் எட்டப்படவில்லை என்று சபாநாயகர் அலுவலகம் அறிக்கை வௌியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு இந்த அறிக்கை வௌியானது.
2006.11.23 ம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் படி உயர் நீதிமன்ற நீதியரசர்களின் வேதன அதிகரிப்பு இடம்பெறும் போது அதற்கு சமாந்தரமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் நீதிபதிகளின் வேதன அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமையை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனத்தை அதிகரிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி சபாநாயகருக்கு கிடைத்த அறிவித்தலுக்கு அமைவாக நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி 2006.11.23 ம் திகதி தீர்மானத்தின் படி செயற்படுவதா அல்லது வேறு வழியில் செயற்படுவதா என்பது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விளக்கம் கேட்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளிடமும் கருத்து கோரப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
(tamil news No final decision increasing MPs salaries Speakers Office)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்