சமூகவலைதளங்களில் பரவும் செய்தி உண்மையல்ல – நெல்லை டெபுடி கமிஷனர்

0
794

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி வதந்தியாக பரவி வருகிறது. அது என்னவென்றால், “பெண்கள் தனியாக ஆட்டோ அல்லது வாடகை காரில் பயணம் செய்வதற்கு முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் அந்த வாகனத்தை காவல்துறை ஜிபிஆர்எஸ் மூலம் கண்காணிக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவலை பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் இது உண்மையா என ஒரு டுட்டர் பயனாளி நெல்லை டெபுடி கமிஷனரிடம் அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள நெல்லை டெபுடி கமிஷனர் அர்ஜுன் சரவணன், “அந்த தகவல் முழுக்க பொய். தமிழ்நாடு காவல்துறையில் இப்படி எந்த திட்டமும் இல்லை. பாதுகாப்பிற்காக “காவலன் SOS” செயலியை பயன்படுத்தவும் என்று கூறியுள்ளார்.