(Tamil news missing people office against relatives)
காணாமற் போனோர் பற்றிய அலுவலகத்திற்கும், யாழ் மாவட்ட சிவில் சமூகத்திற்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
குறித்த சந்திப்பு யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆயினும் இந்த அலுவலகத்தில் நம்பிக்கை இல்லையென்றும் தங்களை ஏமாற்றும் செயற்பாடு என்றும் குற்றஞ்சாட்டி காணாமற் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு பகுதி காணாமற்போனோரின் உறவினர்கள் இந்தச் சந்திப்பை புறக்கணித்த அதே வேளையில் இன்னொரு பகுதியினர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இச் சந்திப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும், அலுவலகத்திற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது காணாமற் போனோரின் உறவினர்களுக்கு, குழுக்கள் மற்றும் அமைப்புக்களின் மீது நம்பிக்கையில்லை. அதனாலேயே அவர்கள் எதிர்க்கின்றனர்.
ஆகவே அந்த அலுவலகமாவது அவர்களுக்கான தீர்வை வழங்க வேண்டுமென்று சிவில் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(Tamil news missing people office against relatives)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com