Facebook Instagram VKontakte Youtube
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
Search

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

LogoTamil News
LATEST TAMILNEWS LIVE UPDATE

மத்திய கிழக்கு நெருக்கடி; எகிறும் விமான Ticket விலைகள்!

22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மன்மதன்; ஷாக்கான பொலிஸார்

ஈரான் போரில் உண்மையை மூடி மறைத்த அமெரிக்கா; வெளிச்சத்துக்கு வந்த தகவல்!

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையா?

தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு

LogoTamil News

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

LogoTamil News
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
type here...
Latest Tamilnews live UPDATE:

மத்திய கிழக்கு நெருக்கடி; எகிறும் விமான Ticket விலைகள்!

22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மன்மதன்; ஷாக்கான பொலிஸார்

ஈரான் போரில் உண்மையை மூடி மறைத்த அமெரிக்கா; வெளிச்சத்துக்கு வந்த தகவல்!

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையா?

தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு

Logo
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
type here...
Home Head Line கல்வியின் ஊடாகவே சமூக அரசியல் பிரச்சினைகளை தீர்க்கலாம் – ஜனாதிபதி நம்பிக்கை
  • Head Line

கல்வியின் ஊடாகவே சமூக அரசியல் பிரச்சினைகளை தீர்க்கலாம் – ஜனாதிபதி நம்பிக்கை

By
Vicky
-
03/08/2018
0
429
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    tamil news Maithripala said solution various political social problems education

    (tamil news Maithripala said solution various political social problems education)

    கல்வியின் ஊடாகவே ஒரு நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

    நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள பிள்ளைகளை கல்விமான்களாக உருவாக்குவதற்கு கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

    இன்று (03) அநுராதபுரம் சுவர்ணபாலி வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

    கல்வியின் மூலமே ஒரு மனிதனிடம் சிறந்த ஒழுக்க பண்பாடுகள் உருவாகின்றன எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கல்விக்காக முடியுமான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

    1876 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட பாடசாலையான அநுராதபுர சுவர்ணபாலி வித்தியாலயத்தின் 142 வருட கல்விப் பயணத்தை ஜனாதிபதி பாராட்டினார்.

    இன்று கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி, மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

    இந்த நிகழ்வின் போது ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

    அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, சந்திராணி பண்டார, வட மத்திய மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க, பாடசாலை அதிபர் ரமணிவாசல ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    இதேநேரம் அநுராதபுரம் தீபானி மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்தையும் ஜனாதிபதி இன்று மாணவர்களிடம் கையளித்தார்.

    பாடசாலையிலும் மாணவர்கள் ஜனாதிபதி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    புதிய மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, பாடசாலை பிள்ளைகளுடன் சுமூகமாக கலந்துரையாடி அவர்களின் விபரங்களை கேட்டறிந்தார்.

    1954 ஆம் ஆண்டு பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அநுராதபுரம் தீபானி மகா வித்தியாலயம் 1957 ஆம் ஆண்டு செப்டெம்பர் 2 ஆம் திகதி அரசாங்க பாடசாலையாக மாற்றப்பட்டது.

    இன்று விஞ்ஞானம், கலை, வர்த்தகம் ஆகிய துறைகளில் சுமார் 1000 மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றனர். ´அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை´ திட்டத்தின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 2 கோடி 85 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

    இதேநேரம் அநுராதபுரம் இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி அன்னதான மண்டபமும், மூன்று மாடி மாணவர் மத்திய நிலையமும் ஜனாதிபதி இன்று திறந்து வைக்கப்பட்டது.

    இப்பல்கலைக்கழகத்தை சர்வதேச பௌத்த பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப திட்டத்தின் கீழ் 213 மில்லியன் ரூபா செலவில் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரர் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். பேராசிரியர் கனத்தேகொட சத்தாரதன நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

    இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் பெளத்த பாலி கற்கைத் துறையின் பேராசிரியர் பாத்தேகம ஞானீஸ்சர தேரரினால் எழுதப்பட்ட நூல் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

    அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, துமிந்த திசாநாயக்க, சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, வட மத்திய மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

    (ஜனாதிபதி ஊடக பிரிவு)

    (tamil news Maithripala said solution various political social problems education)

    தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

    • நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
    • பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
    • புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
    • போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
    • அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
    • காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
    • கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
    • விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
    • பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்

    Tamil News Group websites

    • Cinema.tamilnews.com
    • Astro.tamilnews.com
    • Sports.tamilnews.com
    • Video.tamilnews.com
    • France.tamilnews.com
    • Cinemaulagam.com
    • Gossip.tamilnews.com
    • Swiss.tamilnews.com 
    • TAGS
    • tamil news Maithripala said solution various political social problems education
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleஅமெரிக்க அரசியல் கட்சி பணிப்பாளரை சந்திந்த ரவூப் ஹக்கீம்
      Next articleநாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பு – இறுதி தீர்மானம் இல்லை
      Vicky
      Vicky
      https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/

      Advertisments

      Latest posts

      மத்திய கிழக்கு நெருக்கடி; எகிறும் விமான Ticket விலைகள்!

      13/03/2026

      22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மன்மதன்; ஷாக்கான பொலிஸார்

      13/03/2026

      ஈரான் போரில் உண்மையை மூடி மறைத்த அமெரிக்கா; வெளிச்சத்துக்கு வந்த தகவல்!

      13/03/2026

      Categories

      • Sri Lanka News12333
      • Sri Lanka9754
      • Sri Lanka7063
      • Head Line6235
      • Political News3357
      • India2589
      • Top Story2538
      • World2406
      Contact us

      122, Office Complex,
      Brown Road,
      Jaffna,
      Sri Lanka.

      HOTLINE : (+94) 777 15 70 70
      CALL CENTER : (+94) 114 400 400
      TEL : (+94) 21 222 6575

      ABOUT TAMIL NEWS

      TAMIL NEWS Registered in 1999. Read Tamil News Online. We Update Today News In Tamil. Its Covers Latest Tamil News and Tamil News Live Update

      Tamil News is an Tamil and English-language daily news website published in Worldwide.Tamil News target audiences of website which is published in broadsheet are businessmen, executives and diplomats.It is update from Jaffna, Srilanka and Chennai, India

      Tamil news website is operated with the most prominent and experienced journalists in Sri lanka, India and worldwide. Tamil news is running under the direct management of the popular business brand TAATAS ltd and continues to provide accurate day to day news from Colombo & Chennai to meet our readers expectations.

      Follow us
      Facebook
      Twitter
      Youtube

      © All Rights Reserved Tamil News