(TAMIL NEWS Jaffna Media Center condempt against threat tamil reporter)
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி நாளிதழின் செய்தியாளருக்கு வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக யாழ்ப்பாண ஊடக அமையம் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
யாழ். ஊடக அமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
குறிப்பாக பெண்கள் தமிழ் ஊடகத்துறையில் காலடியெடுத்து வைப்பதற்கு அஞ்சி பின்வாங்குகின்ற சூழ்நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக அமையப் போவதில்லை.
கடந்த வருடம் இராணுவ அதிகாரியொருவரால் இதே பாணியில் அச்சுறுத்தப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஏற்கனவே, சிறுகும்பல் ஒன்றினால் அண்மையில் வலம்புரி நாளிதழின் பிரதிகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் இனங்களிடையே தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும் என்பதை யாழ். ஊடக அமையம் எச்சரித்திருந்தமை நினைவு கூறத்தக்கது.
அதேவேளை, ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவது ஊடக சுதந்திரத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கையாகும் என புரிந்துணர்வுடன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த காலங்களில் அரச படைகளாலும் அவர்களின் பங்காளிகளாலும் ஊடகவியலாளர்கள், ஊடக பணியாளர்கள் மற்றும் ஊடக அலுவலகங்கள் மீதும் அரங்கேற்றப்பட்ட தாக்குதல்கள், கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகச் செய்யப்படுதல்களால் நாம் இழந்தவை அதிகம்.
குறிப்பாக ஊடகத்துறையிலிருந்து பெருமளவிலானோர் வெளியேறும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக ஊடக அமையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(TAMIL NEWS Jaffna Media Center condempt against threat tamil reporter)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கைக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா
- மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்
- எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா செல்வதற்கான விசா மறுப்பு
- நாமல் குமார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
- ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு உத்தரவு
- 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டம்
- புத்தளம் பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
- குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
- இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
- சுமந்திரனை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்