(tamil news china Nepal citizens arrested kattunayake smuggling)
இலங்கையிலிருந்து 2,75,24,000 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களுடன் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த சீன மற்றும் நேபாள நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் இன்று (17) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்கள் இருவரும் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், நேபாள நாட்டவர்கள் 20 மற்றும் 25 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அதிகாலை 5.40 மணியளவில் ஜெட் எயார்வேய்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 9W-255 என்ற விமானத்தில் முப்பாய் நோக்கி செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
குறித்த நபர்கள் கொண்டு வந்த பயணப்பை மற்றும் அணிந்திருந்த ஆடைகளில் 169,900 அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்திருந்த போது சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர்கள் நால்வரும் இலங்கையில் கெசினோ விளையாட வந்தவர்கள் எனவும், விளையாடி வெற்றி பெற்ற பணத்தையே இவ்வாறு எடுத்து செல்ல முற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சுங்க அதிகாரிகள் இது பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(tamil news china Nepal citizens arrested kattunayake smuggling)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு
- புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிநாசினிக்கான தடையை நீக்க நடவடிக்கை
- பெற்றோரை பயமுறுத்துவதற்காக கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- பலம்வாய்ந்த பாதாள உலக கோஷ்டியை உருவாக்கத் திட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com



