இலங்கையில் ஈழப்போர் முளைவிடத்தொடங்கிய காலப்பகுதியில் , அமைதியை நிலை நாட்டுகிறோம் என்னும் போர்வையில் எமது தாயக்கப்பரப்பில் நுழைந்த இந்திய அமைதிப்படையின் முன்னால், ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அவை நிறைவேறாமல் பன்னிரண்டு நாட்கள் பசியிருந்து எமது மக்களுக்காக உயிரை அர்ப்பணம் செய்த தியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவு தினம் இன்றாகும். Taiyaki Thileeban Remembrance Day Sri Lanka Tamil News
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த திலீபன் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு இலங்கைத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.
ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26 1987 ல் (இன்று ) வீரச்சாவடைந்தார்.
திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள்
1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது.தொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் சரியாக காலை 10.58 க்கு வீர மரணம் அடைந்தான்.அதிகாரத்துவம் அவனை சாகவிட்டுவிட்டது. ஆனால் அதுவே பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. மீண்டும் அந்த மக்களை ஆயுதம் தங்கிய போராட்டத்திற்கு வழி வகுத்தது
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!
அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் உண்ணாவிரத போராட்டம்
தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!
விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்
உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!



