TR ன் புகாருக்கு என்ன ஆதாரம் ?? இருந்தால் காட்டுங்கள் : விஷால் பதிலடி

0
648
T Rajendar compliant vishal says proof latest gossip

(T Rajendar compliant vishal says proof latest gossip)

விஷால் நடித்து வெளியான இரும்பு திரை திரைப்படம் வெளியாகி வெற்றி வாகை சூடி கொண்டிருக்கும் வேலையில் விஷாலுக்கு எதிராக T ராஜேந்தர் ,   நடிகர் ராதாரவி, பரதிராஜன் தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இவருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர் .மேலும் T ராஜேந்தர் நேற்று இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஷாலை கழுவி ஊற்றி அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் .

இந்நிலையில் அவர் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கு ,வாயால் பேசுவதை விட ஆதாரத்தை காட்டுங்கள் என மறுபுறம் விஷால் பொரிந்து தள்ளியுள்ளார் .

நேற்று பாரதிராஜா தலைமையில் டி.ராஜேந்தர், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஜே.கே.ரித்திஷ், விடியல் ராஜு, கலைப்புலி சேகரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலர் கூடி பேசினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த 7 கோடி ரூபாய் என்ன ஆனது என்று கணக்கு காட்டவில்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள விஷால், தயாரிப்பாளர் சங்க பணத்தை யாரும் கையாடல் செய்யவில்லை. எல்லாக் கணக்குகளும் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பைரசி இணையதளங்களை அடியோடு  அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.  மேலும் என்மீது நடிகர் சங்க உறுப்பினர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் , எல்லாவற்றுக்கும் நான் தயாராக இருக்கின்றேன் .என விஷால் கூறியுள்ளார் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

keyword:T Rajendar compliant vishal says proof latest gossip