கனடாவின் மூன்று நகரங்களின் மேயர்கள் சுவாமி நித்தியானந்தாவின் கைலாசா நகரை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கைலாசா இராச்சியத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒன்றுக்கு பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் அமைந்துள்ள மூன்று நகரங்கள் அதிகாரபூர்வமாக பதிலளித்துள்ளன.
சர்ரே, விக்டோரியா மற்றும் நானாய்மோ ஆகிய நகரங்களின் மேயர்கள் இவ்வாறு கைசலாசா என்ற அங்கீகாரமற்ற நாட்டின் கோரிக்கைக்கு அதிகாரபூர்வமாக பதிலளித்துள்ளனர்.
பெரும் சர்ச்சைக்கரிய சுவாமி நித்தியானந்தவின் தலைமையிலான கைலாசா இராச்சியம் குரு பூர்ணிமா தினமாக கடந்த 3ம் திகதியை அறிவித்திருந்தது.

இந்த தினத்தை குறித்த மூன்று கனடிய நகரங்களும் அதிகாரபூர்வமாக தங்களது நகரங்களில் பிரகடனம் செய்துள்ளன.
இவ்வாறு பிரகடனம் செய்த போதிலும் கைலாசா என்ற நாட்டுக்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, கைலாசாவின் மரபுரிமைகள் மாதத்தினை அங்கீகரிக்கும் கடிதமொன்றில் கையொப்பமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ரே மேயர் பிரன்டன் லொகீ, நானாமியோ லெனார்ட் கொர்க் மற்றும் விக்டோரியாவின் மேயர் மாரியானே அல்டோ ஆகியோர் உலக அளவில் அங்கீகரிக்கப்படாத கைலாசாவின் கோரிக்கையை ஏற்று அது தொடர்பான பிரகடனம் செய்துள்ளனர்.