கனடா பாடசாலையொன்றிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்; நடந்தது என்ன!

0
620

கனடாவின் பிராம்டன் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்தன் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

பாடசாலை கட்டட உற்புற பகுதியில் அடையாளம் தெரியாத பொருள் பீச்சப்ப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மாணவர்கள் அவசரமாக பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரம்மேலியா மற்றும் பாதர் டோவின் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள லுயிஸ் ஆர்பர் இரண்டாம்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மர்ம பொருள் காரணமாக பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஐந்து பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் வைததியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் எவருக்கும் எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பொருள் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருள் என அதிகாரிகள் விபரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என பிரம்டன் தீயணைப்பு சேவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த மர்ம பொருள் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.