தெலுங்கு திரையுலகினரை ஆட்டி படைத்த பின் தமிழ் திரையுலகிற்குள் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழ் திரையுலகிற்குள் இருக்கும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர். முருதாஸ் மீது பாலியல் புகார் வைத்தார் ஸ்ரீரெட்டி. அதிலும், எங்கே எப்படி என்ற விவரத்தோடு இருந்தன அந்த புகார்கள். Sri Reddy Vishal connection kollywood tamil news
ஸ்ரீரெட்டி சென்னைக்குள் நுழையும் போதே, தமிழ் பிரபலங்கள் அவர் மீது புகார் அளிக்க உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க முயன்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இவ்வாறான செய்திகளையடுத்து ஸ்ரீரெட்டி வெளுத்து வாங்கப்படுவார் என எதிர்ப்பார்த்த போதும், எந்த நடவடிக்கையும் அவருக்கெதிராக எடுக்கப்படவில்லை..
தெலுங்கு திரையுலகினர் ஸ்ரீ ரெட்டியை ஒதுக்கினாலும், கோலிவுட்டில் அவர் செட்டிலாக திட்டமிட்டுள்ள அளவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் வந்து குவிவதாக பேட்டி கொடுத்துள்ளார்.
அப்படியென்றால் ஸ்ரீ ரெட்டிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? விஷால் ஸ்ரீ ரெட்டி விஷயத்தில் மட்டும் மௌனம் காப்பது ஏன்?
ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக நடிகை ஆண்ட்ரியாவும் பேசியுள்ளார். ஸ்ரீ ரெட்டி சொல்வது உண்மையானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
#SriReddy #SriReddyLeaks
Tags: Sri Reddy Vishal connection kollywood tamil news
<<RELATED CINEMA NEWS>>
சாமி ஸ்கொயர் படம் ரிலீசுக்கு தயாராம்
விராட் கோலி வேடத்தில் துல்கர் சல்மான்
பிறந்த நாளன்று ஆரம்பமாகிறதா அஜித்தின் அடுத்த பட பணி?
ஶ்ரீரெட்டிக்கு பதில் கொடுத்த சிம்பு!!
எமது ஏனைய தளங்கள்