டி20 சர்வதேச போட்டிகளில் அதிக தோல்வியை சந்தித்த அணியாக இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி மிக மோசமான சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற மூன்று டி20 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இந்த சாதனையை படைத்துள்ளது.
குறித்த பட்டியலில் 105 போட்டிகளில் தோல்வியடைந்து இலங்கை அணி முதலாவது இடத்திலும் 104 போட்டிகளில் தோல்வியடைந்து பங்களாதேஷ் இரண்டாவது இடத்திலும், 101 போட்டிகள் தோல்வியடைந்து மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஒரு காலக் கட்டத்தில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இலங்கை அணி தற்போது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.