இலங்கையின் பணவீக்கம் 1.6% ஆகக் குறைந்தது நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதத்தில் 2.4% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், பெப்ரவரி மாதத்தில் 1.6% ஆகக் குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜனவரி மாதத்தில் 3.4% ஆக இருந்த உணவுப் பிரிவின் பணவீக்கம், கடந்த மாதத்தில் 1.1% ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும் உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் 1.6% இலிருந்து 1.9% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.



