இலங்கை பெண்கள் விற்பனை; தூதரக அதிகாரி பணியிடை நீக்கம்!

0
336

ஓமானில் இலங்கைப்பெண்கள் விபச்சாரத்திற்கு விற்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட தூதரக அதிகாரி பணியிடை நீக்கப்பட்டுள்ளார்.

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த அதிகாரி இலங்கை வந்தவுடன் கைது செய்யப்படுவார் என அவர் மேலும் கூறியுள்ளார்.