Miss World போட்டிகளில் முன்னேறிய இலங்கை அனுதி!

0
113

இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72 வது உலக அழகி போட்டியில் ‘Multimedia Challenge’பிரிவில் 20 இறுதிப் போட்டியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உலக அழகி போட்டி ஒன்றில் fast-track events பிரிவில் இலங்கை முதல் 20 இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறை ஆகும்.

ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் ‘Multimedia Challenge’பிரிவில் 5 இறுதிப் போட்டியாளர்களாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Miss World 2025 இறுதிப் போட்டிகள் மே மாதம் 31 ஆம் திகதி ஹைதராபாத் சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதது.